கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; தென்பெண்ணையில் 880 கன அடி வெளியேற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
09:46

ஓசூர்: கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று நீர்வரத்து அதிகரித்ததால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 880 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரில், ரசாயன நுரை ஏற்பட்டு ஆற்றில் ஆங்காங்கு தேங்கி நின்றது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த, 16 முதல், 20 வரை, 400 கன அடி இருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம், 853 கன அடியாக அதிகரித்தது. தென்பெண்ணை ஆற்றில், 560 கன அடியும், வலது, இடது கால்வாயில், 88 கன அடியும் என, மொத்தம், 648 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 880 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 39.36 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், 880 கன அடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. வலது, இடது கால்வாயில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. தென்பெண்ணை ஆற்றில், அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும், கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரில், ரசாயன நுரை ஏற்பட்டு ஆற்றில் ஆங்காங்கு தேங்கி நின்றது.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X