10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் | கரூர் செய்திகள் | Dinamalar
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2020
10:04

கரூர்: கரூரில், 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மார்ச், 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், கடந்த ஏப்ரல் மாதம் நடக்க வேண்டிய, 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். வருகை பதிவேடு, காலாண்டு தேர்வு மதிபெண், அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம், மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்கப்பட்டது. நேற்று மாநிலம் முழுவதும், அசல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. கரூரில், பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட, மாவட்டத்தில் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X