வரத்து குறைந்தும் விலை கிடைக்கவில்லை: வாழை வியாபாரிகள் கவலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
10:05

கரூர்: ஆயுத பூஜையையொட்டி, கரூரில் வாழைத்தார் வரத்து குறைவாகவே உள்ளது. ஆனாலும், போதிய விலை கிடைக்காததால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.


ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை நாளை, சரஸ்வதி பூஜை நாளை மறு நாள் கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் மோகனூர், திருச்சி மாவட்டம் காட்டுபுத்தூர், கரூர் மாவட்டத்தில் மாயனூர், லாலாப்பேட்டை, குளித்தலை, வாங்கல், நெரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள், கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை மார்க்கெட்டுக்கு நேற்று வந்தன.


இதுகுறித்து, வாழைத்தார் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: ஆயுதபூஜை நடக்கும், மூன்று நாட்களுக்கு முன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு வரும். ஆனால், ஊரடங்கு உத்தரவால், பல்வேறு தொழில்கள் இன்னும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை. நடப்பாண்டு ஆயுதபூஜை விழா சிறப்பாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால், விவசாயிகள் வாழைத்தார்களை கூலி கொடுத்து, அதிகளவில் வெட்டவில்லை. குறைந்தளவில்தான் வாழைத்தார்கள் வந்துள்ளன. கரூர் டவுன், வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, புலியூர், திருமாநிலையூர், செல்லாண்டிப்பாளையம், ராயனூர், காந்தி கிராம், திருகாம்புலியூர், ஆண்டாங்கோவில், சுக்காலியூர், மண்மங்கலம், உள்ளிட்ட, பல்வேறு நகரப்பகுதிகளுக்கு, ரயில்வே ஸ்டேஷன் சாலை மார்க்கெட்டில் இருந்துதான், வாழைத்தார்கள் ஏலத்துக்கு எடுக்கப்பட்டு, கொண்டு செல்லப்படும். ஆனால் இன்று (நேற்று) வாழைத்தார்களை ஏலம் எடுக்க, அதிகளவில் சில்லரை வியாபாரிகள் வரவில்லை. இதனால், வாழைத்தாருக்கு உரிய விலை கிடைக்க வில்லை. கடந்தாண்டு, 1,000 ரூபாய் வரை பூவன் வாழைத்தார் தற்போது, 500 முதல், 600 ரூபாய்; 700 ரூபாய்க்கு விற்ற செவ்வாழை, 400 ரூபாய்; 600 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 500 ரூபாய்க்கும் ஏலம் போனது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X