கரூர்: வெங்கமேடு, காமதேனு நகர் பகுதியில், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில், 'லிங்க் பாக்ஸ்' வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், நூற்றுக் கணக்கான வீடுகள், ஜவுளி நிறுவனங்களுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில மாதங்களாக அந்த பாக்ஸ் சாய்ந்த நிலையில், எந்நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.