கரூர்: கரூர் அருகே, ராயனூர் இலங்கை தமிழர் முகாம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. மேலும், கரூர் நகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குப்பையை அகற்றாததால், அழுகி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே, குப்பையை நாள்தோறும் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.