குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., மேட்டுமருதூர் காலனியில், 15 ஆண்டுகளுக்கு முன், சமுதாய கூடம் கட்டப்பட்டது. இங்கு, பொது மக்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளை குறைந்த கட்டணத்தில் நடத்தி வந்தனர். ஆனால், குடிநீர், மின் விசிறி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டனர். மேலும் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். சுற்றுச்சுவர் இல்லாததால் சமுதாய கூடத்தை பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, சுற்றுச்சுவர் அமைக்கவும், தனியாக சமையல் கூடம், உணவு அருந்தும் கூடம் புதியதாக அமைக்க வேண்டும் எனவும், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, டவுன் பஞ்., செயல் அலுவலர் மேகநாதன் கூறுகையில், ''போதிய நிதி இல்லாததால் புதிதாக உணவு கூடம், சுற்றுச்சுவர் கட்டமுடியாத நிலை உள்ளது. விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.