கான்கிரீட் கலவை கொட்டப்படுவதால் சாலையில் நீர்வழிப்பாதை அடைப்பு | கரூர் செய்திகள் | Dinamalar
கான்கிரீட் கலவை கொட்டப்படுவதால் சாலையில் நீர்வழிப்பாதை அடைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2020
10:09

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலங்களில் கொட்டப்படும் கான்கிரீட் கழிவுகளால் நீர் வழிப்பாதையில் தடுப்பு ஏற்படுகிறது.


தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், மழைநீர் செல்ல நீர் வழிப்பாதைகள் கண்டறியப்பட்டு, சாலைகளில் மழைநீர் தேங்காதவாறு சிமென்ட் குழாய்கள் பதித்து ஆங்காங்கே பாலங்கள் அமைத்துள்ளனர். இந்நிலையில் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கட்டப்படும் பெரும்பாலான புதிய கட்டடங்களுக்கு, 'ரெடிமேட் பிக்சட்' கான்கிரீட் கலவையையே கட்டடம் கட்டுபவர்கள் நாடுகின்றனர். லாரிகள் மூலம் கான்கிரீட் கலவை கொண்டு வந்து பயன்படுத்திய பிறகு, கிளம்பி செல்லும் லாரி டிரைவர்கள் சாலையோரமுள்ள பாலங்களின் அருகே லாரியை நிறுத்தி, கழிவு கான்கிரீட் கலவையை வெளியேற்றிவிட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவை, பாலங்களில் அமைக்கப்பட்ட சிமென்ட் குழாயில் வழியை அடைத்து விடுகிறது. மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி, சாலைகளில் வழிந்தோடும் நிலை உருவாகிறது. இதனால் அப்பகுதிகளில் விபத்து நடக்க ஏதுவாகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலங்களை ஆய்வு செய்து, மழை தண்ணீர் செல்ல நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, லாரிகளில் கொண்டு வந்து கான்கிரீட் கலவை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X