ஜாமின் கையெழுத்திட வந்தவர்களுக்கு வெட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
12:16

கடலுார்: கடலுாரில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட லாட்ஜில் தங்கியவர்களில் 2 பேரை, கத்தியால் வெட்டிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.



சென்னை, எண்ணுாரைச் சேர்ந்தவர் சிங்காரவேல், 63; இவரது மகன்கள் அலெக்ஸ் 33; அமுத நிரஞ்சன், 30; நெல்சன் மண்டேலா, 23, மைக் டைசன், 25; இவர்கள் சென்னை எண்ணுார் போலீஸ் நிலைய பகுதியில் கடந்த ஜூலை 15ம் தேதி நடந்த கொலை வழக்கில் கைதாகினர். இதில் நிபந்தனை ஜாமினில், கடலுார் முதுநகர் போலீஸ் நிலையம் அருகே லாட்ஜில் தங்கி, கடந்த மாதம் 9ம் தேதி முதல் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திடுகின்றனர். இந்நிலையில், சிங்காரவேல் தங்கை மகன் நாகை மாவட்டம், செருத்துாரைச் சேர்ந்த அஞ்சப்பன் மகன் அருண், 20; புதுச்சேரி, நல்லவாடு மீனவ கிராமத்தில் நடந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்தார்.



சிங்காரவேல் முதுநகரில் இருப்பதையறிந்த அருண், மொபைல் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது, சிங்காரவேல் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அருண், நல்லவாடு பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் முகில்ராஜ், 24; என்பவருடன் நேற்று முன்தினம் லாட்ஜிக்கு சென்று பணம் கொடுத்தார். பின்னர், சிங்காரவேல் உட்பட 6 பேரும் லாட்ஜில் மது அருந்தினர். அப்போது, 'கொலை செய்தால் என்ன பெரிய ஆளா என சிங்காரவேலுவிடம், முகில்ராஜ் கேட்டதால் தகராறு ஏற்பட்டது.



சிங்காரவேல் தரப்பினர், முகில்ராஜை தாக்கினர். முகில்ராஜ், நல்லவாடு பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் கதிர்ஒளி மகன் பிரவனேஷ், 20; செல்வராஜ் மகன் ஜெயக்குமார், 25; மோகன் மகன் அபிவிலாஷ்,24; பாண்டியன் மகன் தீபன், 21; ஆகியோரை வரவழைத்து நெல்சன் மண்டேலா, மைக் டைசன் ஆகியோரை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில், காயமடைந்த அவர்கள், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து பிரவனேைஷ கைது செய்து, அருண் உட்பட 5 பேரை தேடிவருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X