கணவர் வீடு முன் பெண் தர்ணா: கழுத்தை அறுத்து ஆவேசம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
13:02

திட்டக்குடி: திட்டக்குடி அருகே கணவர் வீடு முன் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டு, கை மற்றும் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முத்தையா. இவருக்கும் தி.இளமங்கலத்தைச் சேர்ந்த ஆர்த்தி, 22; என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.எட்டு மாதங்களுக்கு முன் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த ஆர்த்தி, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். குழந்தை பிறந்த ஐந்து மாதங்கள் ஆன நிலையில், முத்தையா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆர்த்தியையும், குழந்தையையும் சென்று பார்க்கவில்லை.



இதனால் கடும் விரக்தியில் இருந்த ஆர்த்தி, நேற்று மதியம் 12: 00 மணிக்கு புலிவலத்திற்கு சென்றார். அங்கு கணவர் வீட்டில் இல்லாததால் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், கணவரை தன்னோடு சேர்த்து வைக்கக் கோரியும் தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து மற்றும் இடது கையை அறுத்துக் கொண்டார்.திட்டக்குடி போலீசார் பேச்சு நடத்தி சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து திட்டக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X