சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலி | கடலூர் செய்திகள் | Dinamalar
சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2020
13:24

செஞ்சி: கூரை வீட்டை புதுப்பிக்கும் வேலையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பள்ளி மாணவன் மீது சுவர் இடிந்து விழுந்து இறந்தார்.



விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நல்லாண்பிள்ளை பெற்றாள் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் மாசிலாமணி மகன் கதிரவன் 14; இவரது தந்தை மாசிலாமணி சென்னையில் மினி சரக்குவேன் ஓட்டி வருகிறார். அவருடன் மனைவியும் உள்ளார்.கதிரவன் தனது தம்பியுடன் நல்லாண்பிள்ளை பெற்றாளில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.



நேற்று காலை கதிரவன் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் கூரை வீட்டின் கூரையை பிரித்து புதுப்பிக்கும் வேலையை வீட்டில் அருகில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.அப்போது மழையினால் ஈரமாகி இருந்த வீட்டின் 10 அடி உயர மண் சுவர் திடீரென இடித்து கதிரவன் மீது விழுந்தது. இதில் சிக்கிய கதிரவன் அதே இடத்தில் இறந்தார். நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X