மூளையில் குத்திய மரக்குச்சி அகற்றம் - விழுப்புரம் அரசு மருத்துவர்கள் சாதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
13:36

விவசாயி ஒருவரின் மூளையில் குத்திய மரக்குச்சிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விழுப்புரம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.



விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 42: சிறு விவசாயி . இவர் கடந்த 7 ம் தேதி இரவு 7:00 மணிக்கு நிலத்திலிருந்து வீட்டிற்கு திரும்பினார். வழியில் குறுக்கே நாய் ஓடியதால் பைக் நிலை தடுமாறியது. சாலை ஓரம் இருந்த புதரில் விழுந்தார். அங்கிருந்த மரக் குச்சிகள் இடது பக்க தலையில் குத்தி மண்டை ஓட்டை துளைத்து மூளைக்கு சென்றது. உடன் குமாரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.



அங்கு சி.டி.ஸ்கேன் எடுத்து பார்த்த போது இடது பக்க மூளையில் 4 செ.மீட்டர் தடிமன், 7 செ.மீட்டர் நீளமுள்ள மரக்குச்சி, 5 செ.மீட்டர் ஆழத்திற்குள் இருப்பதை கண்டறிந்தனர். மருத்துவக்கல்லுாரி முதல்வர் குந்தவி தேவி மேற்பார்வையில் மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பல்லவன் தலைமையில் அறுவை சிகிச்சை டாக்டர்கள் கபிலன், சவுந்தர்ராஜன், சுரேஷ், பயிற்சி டாக்டர்கள் கோகுல குமரன், செந்தில், நாராயணன், மயக்கவியல் துறை டாக்டர்கள் தர்மலிங்கம், அறிவழகன், பத்மரூபினி ஆகியோர் கொண்ட குழுவினர் குமாருக்கு இரண்டு கட்டமாக மூளையில் குத்தியிருந்த மரக்குச்சியை ரிங் கிரேனியக்டமி முறையில் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.



தற்போது குமார் நலமுடன் உள்ளார். இது பற்றி கல்லுாரி முதல்வர் டாக்டர் குந்தவி தேவி நிருபர்களிடம் கூறியதாவது: குமாருக்கு மூளையில் குத்தியிருந்த மரக்குச்சியினை, டாக்டர்கள் முழு ஒத்துழைப்பு மற்றும் கண்காணிப்பு காரணமாக சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றி அவரது உயிரை காப்பாற்றி உள்ளனர். தனியார் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் 15 லட்சம் ரூபாய் வரை செலவாகியிருக்கும். இங்கு தமிழக முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.



அறுவை சிகிச்சை குழு டாக்டர்களுடன் முழு ஒத்துழைப்பு வழங்கிய துணை முதல்வர் அனிதா, பொது அறுவை சிகிச்சை பிரிவு துறை தலைவர் உமாராணி, துணை பேராசிரியர் செல்வகுமார், மயக்க வியல் துறை தலைவர் முருகேசன், ரேடியாலாஜி துறை தலைவர் மோகன சுந்தரம், டெக்னீஷியன் சுரேஷ், செவிலியர்கள் ரம்யா, பரிமளா மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், டாக்டர் அறிவழகன், ஆர்.எம்.ஓ., டாக்டர் சாந்தி ஆகியோரை பாராட்டுகிறேன். இவ்வாறு கல்லுாரி டீன் குந்தவி தேவி கூறினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X