நிர்பயா நிதி அனுமதித்தது, பயன்படுத்திய தொகை எவ்வளவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
23:28

மதுரை : பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நிர்பயா நிதி மூலம் இழப்பீடு வழங்க தாக்கலான வழக்கில் இத்திட்டத்தில் அனுமதித்த தொகை மற்றும் பயன்படுத்திய தொகை குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.



மதுரை ஆண்டாள்புரம் கார்த்தி தாக்கல் செய்த பொதுநல மனு: மத்திய அரசு 2013 ல் நிர்பயா நிதி திட்டத்தை கொண்டு வந்தது. அதை பாலியல் வன்கொடுமை உட்பட குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இழப்பீடு வழங்க பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. 2014-15 மத்திய பட்ஜெட்டில் 1000 கோடி, 2016-17 மற்றும் 2017-18 தலா 550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.மொத்தம் 3000 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. சில மாநிலங்கள் இந்நிதியை முறையாக பயன்படுத்தவில்லை.



பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் 2011ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2 லட்சத்து 19 ஆயிரத்து 142 வழக்குகள், 2015 ல் 3 லட்சத்து 14 ஆயிரத்து 575 வழக்குகள் பதிவாகின.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நிர்பயா நிதி மூலம் இழப்பீடு வழங்குதல், ெஹல்ப்லைன், சட்ட உதவி, அவசர உதவி வசதி, தன்னார்வ மகளிர் போலீஸ் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கார்த்தி மனு செய்தார். தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது.



மத்திய அரசுத் தரப்பு, 'துவக்கத்தில் அளித்த நிதிக்கு, பயன்பாட்டுச் சான்று வழங்க மாநில அரசு தவறிவிட்டது. இதனால் மேலும் தொகையை அளிக்க இயலவில்லை. 2018 ல் மாநில அரசு ஆவணங்கள் தாக்கல் செய்தது. இதனடிப்படையில் மத்திய அரசுத் தரப்பில் மேலும் விபரங்கள் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் தேவை,' என தெரிவித்தது.மாநில அரசுத் தரப்பு,'நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் தற்போதுவரை பெறப்பட்ட தொகை, பயன்படுத்திய தொகை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை,' என தெரிவித்தது.



நீதிபதிகள்: நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட தொகை மற்றும் பயன்படுத்திய தொகை குறித்து மத்திய, மாநில அரசுகள் நவ.,23 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X