மயிலை வாலிபர் கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
23:57

மயிலாப்பூர்; சென்னை, மயிலாப்பூர், முத்துகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் மணி, 27. அப்பகுதியில் உள்ள இஸ்திரி கடையில், பணிபுரிந்தார்.இவர் மீது, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், பள்ளிக்கரணை காவல் நிலையங்களில், இரண்டு கொலை உட்பட, பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.மயிலாப்பூரில், கடந்த ஏப்ரலில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், ஒரு மாதத்திற்கு முன், சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் முண்டக கண்ணியம்மன் சாலை வழியாக சென்றார். அப்போது, ஆட்டோவில் வந்த, ஐந்து பேர் மர்ம கும்பல், அவரை வழி மறித்தது.மர்ம கும்பலிடமிருந்து தப்பிக்க முயன்ற மணியை, அவர்கள் அரிவாள், கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டி, தப்பிச் சென்றனர்.இதில், தலைப் பகுதி முற்றிலும் சிதைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே மணி உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவ்விடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.இதில், அதே பகுதியை சேர்ந்த, ஆனந்த், 28, சிவகுமார், 30, பரத், 22, கார்த்தி, 25, ஸ்ரீதர், 30, ஆகிய ஐந்து பேர், கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.நேற்று, அவர்களை கைது செய்து, மயிலாப்பூர் போலீசார் விசாரித்தனர். இதில், கடந்த ஏப்ரலில், பல்லக்கு மாநகரில், வசந்த் என்பவரை, மணி தன் கூட்டாளிகளுடன் கொலை செய்தார்.அதற்கு பழி தீர்க்கவே, ஐந்து பேரும் மணியை கொலை செய்தது தெரிய வந்தது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X