பில்லி, சூனியம் எடுப்பதாக 'ஆட்டை'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
23:59

வண்ணாரப்பேட்டை: பில்லி சூனியம் எடுப்பதாக கூறி, 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜகுமாரன், 45; வேன் ஓட்டுனர். கடந்த வாரம், தன் வீட்டருகே சாமியார் ஒருவரை சந்தித்துள்ளார். அவரிடம், தன் எதிர்காலம் குறித்து, ஜோசியம் பார்த்துள்ளார். வீட்டில் உள்ளோரின், உடல் நலம் குறித்து கேட்டுள்ளார்.அப்போது சாமியார், 'உறவினர் ஒருவர், உனக்கு பில்லி, சூனியம் வைத்துள்ளனர். உடனே, அதை எடுக்க வேண்டும். இல்லையென்றால், உன் குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து' என எச்சரித்துஉள்ளார்.மேலும், பில்லி, சூனியம் எடுக்க, 2 லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு கோழிகளுடன், சென்னை வருமாறு கூறியுள்ளார்.இதை நம்பிய ராஜகுமாரன், கடந்த, 21ம் தேதி, தன் மினி வேனை விற்று, ௨ லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு கோழிகளுடன், ராயபுரம், ஸ்டான்லி மருத்துவமனை அருகே வந்து சாமியாரை சந்தித்து, பணத்தை கொடுத்துள்ளார். கடைக்கு செல்வதாக கூறி, பணத்துடன் சாமியார் தலைமறைவானார். அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டது, ராஜகுமாரனுக்கு தெரிய வந்தது.இது குறித்து, வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.மேலும், சாமியாரின் மொபைல் போன் எண்ணை ஆய்வு செய்ததில், ஏழு பேர் கும்பலாக சேர்ந்து, பணத்தை ஆட்டை போட்டது தெரிய வந்ததுஇதில், அரக்கோணத்தைச் சேர்ந்த சுரேஷ், 34, காசிமேடைச் சேர்ந்த பாப்பா, 56, மதுரை மாவட்டம், அனுப்பானடியைச் சேர்ந்த அமர்நாத், 21, கொடுங்கையூரைச் சேர்ந்த ஜெயந்தி, 29, உள்ளிட்டோர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.நான்கு பேரையும், வண்ணாரப்பேட்டை போலீசார், நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான, சாமியார் யுவராஜ் மற்றும் அவரது மனைவி கலையரசி ஆகியோரை, போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X