விவசாயிகளிடம் இயந்திர நடவு தொழில்நுட்பம் அறிமுகம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 அக்
2020
10:40
பதிவு செய்த நாள்
அக் 25,2020 00:15

மதுரை : தட்டு நாற்றாங்கால் முறையில் குறைந்த செலவில் 15 நாட்களில் நெல்நாற்றுகள் தயாராவதால் விவசாயிகளிடம் இயந்திர நடவு தொழில்நுட்பத்தை வேளாண்மை துறை மற்றும் மதுரை விவசாய கல்லுாரி அறிமுகப்படுத்தி உள்ளன.



விவசாய கல்லுாரியில் இலவச பயிற்சி பெற்று இயந்திர நடவு தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறார் பில்லுசேரி விவசாயி நல்லபிச்சன். இம்முறையில் ஏக்கருக்கு 15 கிலோ விதைகளை 110 டிரேக்களில் விதைத்தால் போதும் என்கிறார்.அவர் கூறியதாவது: பில்லுசேரி கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாய கருவிகள் வழங்க ரூ.5 லட்சம் அரசு மானியம் பெற்றுள்ளோம். விவசாய கல்லுாரியில் ஒரு வாரம் இலவச பயிற்சி தந்தனர். இத்திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சத்தில் 2 விதைப்பு கருவிகள், தட்டு நாற்றாங்காலுக்கான 2000 டிரேக்கள் வாங்கினோம்.



நாற்று நடும் வரை கூலியாட்கள், தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் இனி வேதனைப்பட வேண்டாம். நிலத்தை உழுது வைத்தால் போதும். நாற்றுக்களை நாங்கள் தட்டு நாற்றாங்கால் முறையில் இயந்திர நடவு செய்து தருகிறோம். ஆட்டு எரு, சாணம், கோழிக் கழிவுகளை காயவைத்து மண்ணுடன் கலந்து தட்டில் துாவி நெல் மணிகளை நட வேண்டும். இதற்கு ரசாயன உரம் தேவையில்லை. வழக்கமாக நாற்றாங்கால்களை நடும் போது உழுது பரம்படிக்க வேண்டும். விதை போட்டு நாற்றாங்கால் தயார் செய்து 25 நாட்கள் தண்ணீர் விட்டு பராமரித்த பின் நாற்றுகள் தயாராகும்.



இதற்கு வழக்கமாக விவசாயிகளுக்கு ரூ.7000 வரை செலவாகும். இதில் பாதி செலவு செய்தால் தட்டு நாற்றாங்கால் சாத்தியமாகிறது என்றார்.விவசாய கல்லுாரி உழவியல் உதவி பேராசிரியர் சுப்ரமணியன் கூறுகையில், ''புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் கல்லுாரியிலும் இயந்திர நடவு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கிறோம். 16 கிராமங்களில் விவசாயிகளுக்கு நேரடி செயல்விளக்கம் அளித்துள்ளோம், என்றார். தொடர்புக்கு 90034 28245.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X