கொரோனா அரக்கனை ஒழிப்போம்; சுடர் விடும் நம்பிக்கை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 அக்
2020
01:39
பதிவு செய்த நாள்
அக் 25,2020 00:58

தீப ஒளித் திருநாள் திகட்டாது வருகிறது...இருள் அகற்றிபயம் போக்கிமகிழவைக்க வருகிறது!அடுத்த மாதம் 14ம் தேதி தீபாவளித் திருநாள். நவராத்திரித் திருவிழா கொண்டாட்டங்கள் முடிந்ததுமே, இப்பண்டிகைக்கான களை, துவங்கிவிடும்.கடந்த மார்ச்சில் துவங்கி, உலகையே கொரோனா முடக்கிப்போட்டது. மெல்ல மெல்ல, தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு, இயல்பு நிலை, திரும்பியுள்ளது.


திருப்பூர், ஊரடங்கிலும் கூட, ஓயாமல் உழைத்தது. முகக்கவசம், பாதுகாப்புக் கவச உடைகள் தயாரிப்பு என, தொழிலாளர்களின் வியர்வை, தேசத்திற்காகச் சிந்தியது.வெளி மாவட்டம், வெளி மாநிலம் என, அனைத்துதரப்பினரும் கலந்த நகராக, திருப்பூர் இருக்கிறது. கொரோனா கண்டு, உலகமே கலங்கினாலும், திருப்பூர் மட்டும் விதிவிலக்கு. பாதிப்புகள் இருந்தாலும், அவற்றில் இருந்து மீளும் தன்னம்பிக்கை தளராமல் தொழில்துறையினர் இருந்தனர்.


அதற்கான, வெற்றிக்கனி, இன்னும், கனியவில்லைதான். ஆனால், இதைத் தொழில்துறையினர் சுவைக்கும் காலம், வெகுதுாரத்தில் இல்லை.கடைகள் திறப்புதீபாவளியையொட்டி, இரவு 10:00 மணி வரை, கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள ஜவுளி உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், தீபாவளி வர்த்தகத்தைப் பெரிதும் எதிர்நோக்கியுள்ளன. விஜயதசமிக்குப் பின், வர்த்தகம் சூடுபிடிப்பதற்கான வாய்ப்புகள், வலுவாகத் தென்படுகின்றன.இரவு 10:00 மணி வரை கடைகள் திறக்கப்படுவதால், எத்தகைய அவசரமும் இன்றி, ஷாப்பிங் செய்வது, பொதுமக்களுக்கு எளிதாவதோடு, கொரோனா அச்சத்தையும் போக்குவதற்கு உதவிகரமாக இருக்கும்.


முந்துங்கள்... நல்லது


தீபாவளி ஷாப்பிங்கை, தீபாவளி வரை காத்திருக்காமல், முன்னரே மேற்கொள்வது சிறந்தது. தீபாவளி நேரத்தில், கூட்டத்துடன் சேர்ந்து 'ஷாப்பிங்'செய்வது, ஆடை உள்ளிட்டவற்றைத் தேர்வு செய்வதில், சிக்கலை ஏற்படுத்தும். ஷாப்பிங்கை பொறுமையாக மேற்கொள்ளும்போது, தேர்வும் சிறந்ததாக இருக்கும். மேலும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்கும் உகந்ததாக இருக்கும்.


பின்னலாடை நிறுவனங்களில், தொழிலாளருக்கான போனஸ் பேச்சுவார்த்தைகள், சுமூக நிலையுடன் காணப்படுகின்றன. தீபாவளி வரை காத்திருக்காமல், போனசை உடனடியாக நிறுவனங்கள் வழங்குவதற்கு உத்வேகம் காட்டுகின்றன. கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதால், போனஸ் வழங்குவதில், சற்று தாமதம் ஏற்படுவதாக, நிறுவனத்தினர் சிலர், கூறுகின்றனர்.


கொரோனா ஒழியட்டும்


திருப்பூர் மாவட்டத்தில், கொரோனாவை, தீபாவளிக்குள் முழுமையாக, கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கேற்ப பொதுமக்களின் ஒத்துழைப்பையும், மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது.மாநில அளவில், தொற்று படிப்படியாகக் குறைந்துவருகிறது. இருப்பினும்கூட, பண்டிகையையொட்டி, கவனத்துடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


குடும்பத்தினருடன் கடைகளுக்குச் செல்லும்போது, மறக்காமல், சமூக இடைவெளி கடைபிடித்தலையும், முகக்கவசம் அணிதலையும் பின்பற்றவேண்டும். வெளியிடங்களுக்குச் சென்றதும், கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு நன்கு கழுவுதல் வேண்டும். இதில், அலட்சியம் சிறிதளவு கூடக் கூடாது.வர்த்தகம் சிறக்கும்தீபாவளிக்கு, திருப்பூரில் வர்த்தகம் சிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கடை உரிமையாளர்கள் உள்ளனர்.


கடை உரிமையாளர்கள் கூறுகையில், ''கொரோனா பொருளாதாரத்தை முடக்கியது. திருப்பூரில், தீபாவளி வர்த்தகம் களைகட்டுவதைப் பொறுத்துத்தான், வணிக நிறுவனங்கள் முழுமையாகப் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீளும். இதற்கான நம்பிக்கை, தற்போதே தென்படத் துவங்கியிருக்கிறது. வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் அளவு, வணிக நிறுவனத்தினரின் சேவை நிச்சயம் இருக்கும்' என்றனர்.நரகாசுரன் ஒழிந்ததற்காக மட்டும் அல்ல; இந்தாண்டு தீபாவளி, கொரோனா அரக்கன் முழுமையாக அழிக்கப்பட வேண்டும் என்ற முனைப்புடனும் கொண்டாடப்படும் என்றால், அது மிகையில்லை.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X