தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தர்மபுரி செந்தில்நகரை சேர்ந்த, 50 வயது பெண்; மல்லாபுரத்தை சேர்ந்த, 45 வயது ஆண்; சிகரஹள்ளியை சேர்ந்த, 24 வயது வாலிபர் உட்பட மாவட்டத்தில் மொத்தம், 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள, கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று வரை, 5,439 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். 4,827 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.