ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை ஜோர் | தர்மபுரி செய்திகள் | Dinamalar
ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை ஜோர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 அக்
2020
07:50

அரூர்: ஆயுத பூஜைக்கான, பூஜை பொருட்களை வாங்க, மக்கள் மிக ஆர்வம் காட்டியதால், கடைவீதிகளில், இதன் விற்பனை ஜோராக நடந்தது. ஆயுத பூஜை இன்று, (அக்., 25) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம், அரூரில், நேற்று மதியம் முதல், கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், நான்குரோடு, சந்தைமேடு என, நகரின் முக்கிய இடங்களில், பொரி, பூ மாலைகள், எலுமிச்சை மற்றும் வாழைப்பழங்கள், வெள்ளை பூசணிக்காய், வாழைக்கன்று உள்ளிட்டவற்றை, வியாபாரிகள் விற்பனைக்கு குவித்திருந்தனர். இதை, பொதுமக்கள் ஏராளமானோர் வாங்கியதால், விற்பனை களைகட்டியது. பூ விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சாமந்திப்பூ கிலோ, 120 ரூபாய்க்கும், குண்டுமல்லி மற்றும் முல்லை பூ கிலோ, 700 ரூபாய்க்கும் விற்றது. இதேபோல், பூ மாலைகளும், 10 முதல், 20 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. வெள்ளை பூசணிக்காய், எடை, அளவு அடிப்படையில், 20 முதல், 80 ரூபாய், வாழைக்கன்று ஜோடி, 20 முதல், 30 ரூபாய் என விற்கப்பட்டது.

* தர்மபுரி, நேதாஜி பைபாஸ் சாலை, கடைவீதி உட்பட, நகரின், பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்த மா தோரம், வாழை மரம், சாம்பல் பூசணி, தேங்காய் மற்றும் பொரி கடலை, வெல்லம் ஆகியவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.


* திருவண்ணாமலையில், நேற்று ஆயுதபூஜை பொருட்கள் வாங்க பஜார் வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூஜை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருந்தன. பூசணி, பூ, பழங்கள், பொரி கடலை, உள்ளிட்ட பூஜை பொருட்கள் அதிகளவு விற்பனையானது. பூஜை பொருட்களின் விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்தது.


 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X