அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் போலீசார் சார்பில், குறை தீர்க்கும் முகாம் டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதி மக்களின், நிலுவையில் இருந்த புகார் மனுக்கள் மற்றும் புதிதாக கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்துப் பேசினர். இதில், 20 மனுக்கள் மீது சுமுக தீர்வு காணப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.