கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி பகுதியில் நெல் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்., மேல சிந்தலவாடி, நந்தன்கோட்டை, மகிளிப்பட்டி ஆகிய பகுதிகளில், பாசன வாய்க்கால் மூலம், நெல் சாகுபடி நடக்கிறது. தற்போது, வேளாண்மைத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட, நெல் ரக நாற்றுகளை பறித்து தொழிலாளர்களை கொண்டு நடவு பணி நடந்து வருகிறது. இந்த பகுதியில், 100 ஏக்கரில் நெல் சாகுபடி நடப்பது குறிப்பிடத்தக்கது.