கிருஷ்ணராயபுரம்: இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்தையில், ஆடுகள் விற்பனை மந்த நிலையில் இருந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, இரும்பூதிப்பட்டி சந்தையூரில் வாரச் சந்தை செயல்படுகிறது. இந்த சந்தை சனிக்கிழமை தோறும் கூடுகிறது. இங்கு, காய்கறிகள் விற்பனை நடக்கிறது. மேலும், ஆடு, கோழி விற்பனையும் நடக்கிறது. கடந்த வாரத்தில், இந்த சந்தையில் காய்கறிகள் மட்டும் விற்கப்பட்ட நிலையில் நேற்று கூடிய சந்தையில், ஆடுகள் குறைவாக விற்பனை நடந்தது. ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்ததால், விற்பனை மந்த நிலையில் இருந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.