குளித்தலை: தோகைமலை வாரச்சந்தையில், கடைகளை உள் வாடகைக்கு விடுவதை தடுக்கவும், ஒரு நபருக்கு ஒரு கடை வழங்கவும், கோரிக்கை எழுந்துள்ளது.
குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியனுக்கு சொந்தமான வாரச்சந்தை வெள்ளிக்கிழமைதோறும் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு செய்யப்பட்டு, விற்பனை கடை மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் உள்ளுர் வியாபாரிகள், ஆளும் கட்சியினர் செல்வாக்குடன் பல கடைகளை பெற்றுக்கொண்டு, உள் வாடகைக்கு விடுகின்றனர். இதனால், வியபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். உள் வாடகையை தடுக்கவும், ஒரு வியாபாரிக்கு ஒரு கடை என்ற விதத்தில் கடைகளுக்கு எண் போட்டு, தகவல் பலகை வைக்கவேண்டும் எனவும், கலெக்டருக்கு, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: தோகைமலை வாரச்சந்தை கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இந்த கடைகளில், குளறுபடி நடப்பது குறித்து எந்த விதமான புகாரும் வரவில்லை. கடைகளை உள் வாடகைக்கு விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.