அதிகாலையில் இல்லை பஸ்கள் ; பரிதவிப்பில் கிராம விவசாயிகள், பணியாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2020
23:25

விருதுநகர் : மாவட்டத்தில் அதிகாலையில் பஸ்களை இயக்காததால் கிராம விவசாயிகள், வெளியிடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பரிதவிக்கின்றனர்.



கொரோனா பரவலால் கடந்த மார்ச் 25 முதல் பஸ் சேவை நிறுத்தப்பட்டது. பின் 5 மாதங்கள் கழித்து மீண்டும் செப். 1ல் பஸ்கள் இயக்கப்பட்டது. சேவை துவங்கும் போதே மக்களின் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஒன்றரை மாதங்களாகியும் விருதுநகர் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படாத நிலை உள்ளது. அவ்வாறு ஒரு சில பகுதி களில் இயக்கினாலும் காலை 6:00 மணிக்கு பிறகே இயக்குவதால் அதிகாலையில் விவசாயிகள் விளை பொருட்கள் கொண்டு வருவது, கட்டுமான தொழிலாளர்கள் போன்றோர் நகர்ப்பகுதிகளுக்கு வருவது உள்ளிட்டவற்றில் சிரமம் ஏற்பட்டுள்ளது.



விருதுநகரில் இருந்து கிளம்பும் அப்பையநாயக்கன்பட்டி, சங்கரலிங்கபுரம், சீல்நாயக்கன்பட்டி, சிவகாசியில் விளாம்பட்டி, செவல்பட்டி, சாத்துாரில் தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுவதில்லை. கிராமப்பகுதிகளில் ஒற்றை பஸ்களாக இயக்கப்படும் பஸ்களும் இயக்கப்படவில்லை. பகல், இரவு நேரங்களில் குறைந்த அளவிலே இயக்கப்படுகின்றன. அரசும் இரவு 10:00 மணி வரை கடைகளை செயல்படுத்த அனுமதி வழங்கி உள்ள நிலையில் அடுத்தடுத்து பண்டிகை விழாக்களும் வருகின்றன. இதை உணர்ந்து போக்குவரத்து துறை முழுவீச்சில் பஸ்களை இயக்க முன் வர வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதை அறிவுறுத்தி முறையாக செயல்படுத்த வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X