கடம்பத்துார், அக். 26--
திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில், 5,352 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என, மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில், 52 அரசு பள்ளிகள், 7 அரசு உதவி பெறும் பள்ளிகள், 33 தனியார் பள்ளிகள் என, 92 பள்ளிகள் உள்ளன.இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி என, அறிவித்தது.இதையடுத்து, இந்த பள்ளிகளில், 2,141 மாணவர்கள், 3,211 மாணவியர் என, மொத்தம் 5,352 பேருக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவுப்படி மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது என, திருவள்ளூர் கல்வி மாவட்ட அலுவலர் சவுத்ரி கூறினார்.
இதையடுத்து, கடம்பத்துார் ஒன்றியத்தில் உள்ள வெண்மணம்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, 2019- - 20 கல்வி ஆண்டில் படித்த மாணவர்கள், காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்க அரசு உத்தரவின்படி, மதிப்பெண் வழங்கப்பட்டது.அதன் அடிப்படையில், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா, ஆசிரியர் பாண்டியன் மற்றும் டெலோரஸ் ப்ரபாதேவி ஆகியோர் மதிப்பெண் சான்றிதழ் வழங்கினர்.