கடம்பத்துார் : கடம்பத்துார் கிராமத்தில், கார் கண்ணாடியை உடைத்து, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு உள்ளது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கடம்பத்துார் ஊராட்சி, அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன், 38. இவர், நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே மகேந்திரா காரை நிறுத்தி விட்டு சென்று விட்டார்.'பின் காலையில் வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டார். இதையடுத்து காரிலிருந்த மின் சாதன பொருட்கள், காரில் பொருத்தப்பட்டிருந்த சிறிய டி.வி., லேப்டாப் ஸ்டாண்ட் உட்பட, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து, கடம்பத்துார் போலீசில், ராஜன் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.