போலீஸ் டைரி;
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
00:03

கான்ட்ராக்ட் ஊழியர் விபத்தில் பலி



வெள்ளவேடு: வண்டலுார், ஓட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 33. ஆவடியில் உள்ள தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக கான்ட்ராக்டில் வேலை செய்து வரும் இவர், நேற்று முன்தினம், யூனிகார்ன் டூ - வீலரில் வண்டலுார் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது, காவல்சேரி அருகே வந்த போது, முன்னால் சென்ற ராணுவ வாகனத்தின் பின்னால், டூ - வீலர் மோதி விபத்துக்குள்ளானது.இதில், படுகாயமடைந்த விஜயகுமார், நசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது, அங்கு இறந்தார்.இதுகுறித்து, வெள்ளவேடு போலீசில், இவரது தந்தை குணசேகரன் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



9 சவரன் நகை திருட்டு



செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை, காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரபு, 40. வேப்பம்பட்டு ரேஷன் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வரும் இவர், நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு ரேஷன் கடைக்கு பணிக்கு சென்று விட்டார்.இந்நிலையில், மதியம் தன் வீட்டின் முதல் மாடியில் வசித்து வரும் சூரியன் என்பவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, பிரபு வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, 9 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது.இதுகுறித்து, செவ்வாப்பேட்டை போலீசில், பிரபு அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு



அரண்வாயல்: திருவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர், 31. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று முன்தினம், டூ - வீலரில் பணிக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, அரண்வாயல் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர், சுரேந்தரை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டி, அவரது பாக்கெட்டிலிருந்த, 500 ரூபாயை பறித்து சென்றார்.இதுகுறித்து, செவ்வாப்பேட்டை போலீசில், சுரேந்தர் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து செவ்வாப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், பணம் பறித்ததாக அரண்வாயல் குப்பம், பாலாஜி நகரைச் சேர்ந்த சந்திரசேகர், 38, என்பவரை, கைது செய்து, அவரிடமிருந்து, 200 ரூபாயை மீட்டு கத்தியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X