திருவள்ளூர் : 'சுற்றுலா தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் தங்களின் விடுதி விபரங்களை இணைய தளத்தில் பதிவிட வேண்டும்' என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கை:திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப்படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்படாத சுற்றுலா தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் தங்களின் விடுதிகளின் விபரங்களை www.nidhi.nic.in மற்றும் www.saathi.qcin.org ஆகிய இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும்.மேலும், “SAATHI '' என்கிற இணையதளத்தில், பதிவு செய்யும் விடுதி உரிமையாளர்களுக்கு சுற்றுலா அமைச்சகம், இந்திய அரசு சுய சான்றிதழ் வழங்க உள்ளது.
இந்த நற்சான்று மூலம், தங்கள் வணிகத்தை வெகுவாக உயர்த்திக் கொள்ள முடியும்.மேலும், சுற்றுலா அமைச்சகம், இந்திய அரசு வழங்கும் பயிற்சிகளில் தங்களின் விடுதி பணியாளர்களை பங்கு பெறச் செய்து பயன் பெற வேண்டும்.அவ்வாறு பதிவேற்றம் செய்யும் விபரங்களை thiruvallur@gmail.com மின்அஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.மேலும், விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், கலெக்டர் ஆட்சியரக வளாகம், திருவள்ளுர், தொலைபேசி எண். 044- 27666007, என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.