'நீட்' தேர்வு குறித்த புரிதலே வெற்றிக்கு முதற்படி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
00:07

'நீட் தேர்வு குறித்த சரியான புரிதல் இல்லாததால், துவக்கத்தில் பயம் இருந்தது. அது குறித்து அறிந்து கொண்ட பின், பயம் விலகியது. நீட் குறித்து பிரமிக்க, அது மலை போன்ற விஷயம் இல்லை. அனைவராலும் சாதிக்க முடியும் என்ற, ஒரு தேர்வு அவ்வளவு தான்' என, மாணவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.



நான், எட்டாம் வகுப்பு படிக்கும்போதே, என் தந்தை இறந்து விட்டார். தாய், விவசாய கூலி வேலை செய்து, என்னையும், அண்ணனையும் படிக்க வைக்கிறார். எங்கள் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்போதே, 'நீட்' தேர்வுக்கு என, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினர். எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு, பாட ஆசிரியைகள் விளக்கம் அளித்து, நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில், முக்கிய வினாக்கள் அடங்கிய புத்தகங்களையும் வழங்கினர். இதனால், முதல் முயற்சிலேயே, நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக, மேற்கொண்டு படிப்பை தொடர இயலவில்லை. என் படிப்பு செலவுக்கு, யாராவது உதவி செய்தால், என் கனவு நிறைவேறும்.



பி.ராஜலட்சுமி, 127/720அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, உத்திரமேரூர்பெற்றோர் அளித்த ஊக்கம் தான், 'நீட்' தேர்வு மீது ஆர்வம் ஏற்பட காரணம். பள்ளியில், சிறப்பு வகுப்புகளில் பங்கேற்று, தேர்வு எழுதினேன். சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் அளித்த விளக்கம், தேர்வில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தது. நீட் தேர்வு குறித்த புரிதல் இல்லாததால், துவக்கத்தில் பயம் இருந்தது. தேர்வு எழுதும்போது, அது பெரிதாக தெரியவில்லை. கால்நடை மருத்துவராக படிக்க முடிவெடுத்துள்ளேன்.



ஆர்.மதுமிதா, 148/720 அரசு மேல்நிலைப் பள்ளி,மொறப்பாக்கம், மதுராந்தகம்என் தந்தை, நுகர்ப்பொருள் வாணிப கழக ஊழியர். நான், நீட் தேர்வு எழுத வேண்டும் என, பெற்றோர் ஊக்குவித்தனர். பள்ளி நிர்வாகமும், தினமும், நீட் தேர்விற்கு, மூன்று மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தியது. சிறப்பு வகுப்புகளின்போது, பாடம் சம்பந்தப்பட்ட ஆசிரியரும், உடனிருந்து ஊக்குவித்தனர். இதனால், நீட் தேர்வில் எளிதாக வெற்றி பெற முடிந்தது.-டி.ஹரின் ஷாக் ஷினி, 184/720, வாலாஜாபாத்



நீட் தேர்வு எழுத போகிறோம் என்ற பயம் இல்லை. வழக்கமாக, பள்ளி தேர்வு எழுதுவதுபோல் தான் எழுதினேன். என் முதல் முயற்சியிலேயே, 335 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். தினமும், எட்டு முதல் 12 மணி நேரம் வரை படிப்பேன். 'உன்னால் முடியும்' என, அம்மா ஊக்கப்படுத்தினார். இதனால், தேர்வு பயம் ஏற்படவில்லை. வார விடுமுறை நாட்களில், தனியார் பயிற்சி மையத்திற்கு சென்று படித்தேன். கொரோனா பரவலால், பயிற்சி மையம் இயங்கவில்லை. அதனால் வீட்டிலேயே படித்து வந்தேன். நீட் என்பது, பெரிய மலைப்போன்ற விஷயம் இல்லை. அனைவராலும் எழுத முடியும் என்பதே என் கருத்து.



கோ.தரணிவேந்தன், 335/720,திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டுநீட் தேர்வு என்பது சிறந்து மருத்துவர்களை உருவாக்க அவசியமாகிறது. பொதுத் தேர்வு பாடங்களை, மனப்பாடம் செய்வது போல படிக்காமல், ஒவ்வொரு பாடங்களையும் புரிந்து படிக்க வேண்டும். கவனம் சிதறாமல், மனதில் நிறுத்துவதும் மிக மிக அவசியம். நீட் தேர்விற்கு என் பள்ளி ஆசிரியர்கள் பெரிதும் உதவினர்.தினமும், மூன்று மணி நேரம் பயிற்சி வகுப்பும், அங்கு வைத்த 'டெஸ்ட்'களும் நீட் தேர்வுக்கு, மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. இது இல்லாமல், வீட்டில் தினமும், ஐந்து மணிநேரம் படித்தேன். என் தேர்ச்சிக்கு, பெற்றோர் முக்கிய காரணம். அவர்கள் என்னை சுதந்திரமாக படிக்க விட்டனர். யாருடைய நிர்ப்பந்தமும் இல்லாமல், சுய விருப்பத்தின்படி, தேர்வுக்கு தயாரானால், நிச்சயம் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.



என்.முரளிகிருஷ்ணன், 463/720, மடிப்பாக்கம்எங்கள் பள்ளி தலைமை ஆசிரியரின் அறிவுரைப்படி, 'நீட்' தேர்வு எழுத விரும்பிய எனக்கும், என்னுடன் பயிலும் ஐந்து மாணவர்களுக்கும், தினமும், மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில், ஆசிரியர்கள், தேர்வுக்கு உண்டான பொது அறிவு கேள்விகள் மற்றும் பாட சம்பந்தமான கேள்விகள் குறித்து, விளக்கமாக கூறினர். மாதிரி தேர்வுகளும் நடத்தியதால், நான் தேர்வில் வெற்றி பெற உதவியது. சித்த ஆயுர்வேத மருத்துவம் படிக்க முடிவு செய்துள்ளேன்.கே.பி. ஹரணி, 215 / 720,நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி, மணவாள நகர், திருவள்ளூர் மாவட்டம்




- நமது நிருபர் குழு -

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X