50 உயிர்களை 'காவு' வாங்கிய பாறைக்குழி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

26 அக்
2020
01:38
பதிவு செய்த நாள்
அக் 26,2020 00:16

அவிநாசி:அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட, பெரியாயிபாளையம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான, 40 அடி ஆழ பாறைக்குழி உள்ளது.



ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால், இப்பகுதியை சுற்றியுள்ள சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பலர், அங்கு குளிப்பதற்கு செல்கின்றனர். பலர் எதிர்பாராத விதமாக, தண் ணீரில் மூழ்கி இறந்து விடுகின்றனர்.நேற்று முன்தினம் கூட, அப்பகுதியை சேர்ந்த அயனேஸ்வரன், 10, பாலன், 9, ஆகிய சகோதரர்கள், பாறை குழியில் இறங்கி, குளிக்க முற்பட்ட போது, நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.



ஒன்றிய கவுன்சிலர் சேதுமாதவன் கூறுகையில், ''பாறை குழியை ஊராட்சி சார்பில் குப்பை கொட்டும் இடமாக மாற்ற ஆலோசிக்கப்பட்டது.இதனால், துர்நாற்றம் வீசும் என, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திட்டம் கைவிடப்பட்டது. பாறைக்குழியில் இதுவரை, 50க்கும் மேற்பட்டோர் தவறி விழுந்து இறந்துள்ளனர். எனவே, உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்'' என்றார்.



தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கூறுகையில், ''திறந்தவெளியில் உள்ள கிணறு, பயனற்று கிடக்கும் பாறைக்குழி ஆகியவற்றை மூடுவதற்கு, சுற்றுச்சுவர் அமைப்பதற்கும், உள்ளாட்சி நிர்வாகங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
26-அக்-202014:50:28 IST Report Abuse
Dr. Suriya தனியாருக்கு சொந்தமானதுல அரசு எவ்வாறு தலையிட முடியும் ....அவர்களை வேலி போட அல்லது தடுப்பு சுவர் எழுப்ப/ எச்சரிக்கை வாசகம் வைக்க வேண்டுமானால் கேட்டு கொள்ளலாம்...... எதற்கு அதில் இவர்கள் போய் குளிக்க வேண்டும் ... நீர்நிலைகள் அழிந்துவரும் இந்த காலத்தில் அதை மூடுவதற்கு பதிலாக அரசு நீச்சல் குளம் அமைத்து தருவது சரியான முடிவாக இருக்கும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X