ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடிகால் விரிவுப்படுத்தும் பணியில் மாநகராட்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
00:22

மயிலாப்பூர் : மயிலாப்பூரில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில் சோதனை முயற்சியாக அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால், பலன் அளித்ததை அடுத்து, அப்பணியை மாநகராட்சியினர் விரிவுப்படுத்தி வருகின்றனர்.



சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், 124வது வார்டுக்கு உட்பட்ட, மயிலாப்பூர், மசூதி தெரு முதல்- சித்திரை குளம் வரை, 957 அடி நீளத்திற்கு, ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடிகால் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டது.அதன்படி, சோதனை முயற்சியாக, கடந்த மார்ச்சில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில், 20 அடி நீளத்திற்கு, ஒரே இரவில் வடிகால் அமைக்கப்பட்டது.



சமீப நாட்களாக, சென்னையில் பரவலாக பெய்து வரும் மழைக்கும், இங்கு தண்ணீர் தேங்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கு, 4 செ.மீ., மழை பெய்தாலும், இந்த வடிகால் வழியே, நீர் எளிதில் வடிந்தது.இதைத்தொடர்ந்து, மசூதி தெருவில் இருந்து கேசவபெருமாள் கோவில் தெற்கு, மேற்கு தெரு வழியாக, சித்திரைக்குளம் வரை, மீதமுள்ள, 937 அடி நீளத்திற்கு, வடிகால் அமைக்கும் பணியை, மாநகராட்சியினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.



இதுபோன்ற தொழில்நுட்பத்தின் மூலம் அமைக்கப்படும் வடிகாலில், குறு மணல் போன்ற சின்ன கழிவுகள் கூட செல்ல வாய்ப்பில்லை. கழிவு இல்லாத சுத்தமான நீர், அருகில் உள்ள நீர்நிலையில் தேக்கி வைக்கலாம்.வேறு இடங்களில் இருந்து, சட்டவிரோதமாக, கழிவு நீர் இணைப்பும் தர முடியாது. மழை காலத்திற்கு முன், கால்வாயை துார் வார தேவை இல்லை.



இந்த முறையில், பராமரிப்பு செலவு, வழக்கமான துார் வாரும் பணிக்கான செலவை விட குறைவு.இந்த பணியை, 15 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
26-அக்-202008:18:35 IST Report Abuse
Ram தொழிநுட்பம் ஜெர்மனியிலிருந்து வந்தாலும் செய்வது நம்ம ஆட்கள் ஆகையால் கமிஷன் பெற்றுக்கொண்டு இன்னும் ஒரு வருடத்தில் உடைவதை போல் போடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X