ரயிலில் நகை பறிகொடுத்த பெண்ணிற்கு ரூ.1.70 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
00:30

சென்னை : ரயிலில், நகைகளை பறிகொடுத்த பெண் பயணிக்கு இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



சென்னை, ஏழுகிணறு, வி.வி.எம்., சாலையைச் சேர்ந்தவர் சகுந்தலா, 65. சென்னையில் இருந்து, பீஹார் மாநிலம் சாப்ராவுக்கு செல்லும், 'கங்கா காவேரி எக்ஸ்பிரஸ்' ரயிலில், 2017ல், வாரணாசிக்கு 'ஏசி' மூன்றடுக்கு பெட்டியில் பயணம் செய்தார்.



ரயில், மத்திய பிரதேச மாநிலம் கோராடோங்கிரி அருகே, அதிகாலை, 3:30 மணிக்கு சென்றபோது, கழிப்பறைக்கு சென்றார்.அப்போது, இரண்டடுக்கு, 'ஏசி' பெட்டி வழியாக வந்த மர்ம நபர், திடீரென, கழிப்பறை கதவை சாத்திவிட்டு, பெண் பயணியை மிரட்டி, 7.5 சவரன் உடைய, இரண்டு தங்க சங்கிலிகளை பறித்து, ஓடும் ரயிலில் இருந்து, கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.



அதிர்ச்சியில் இருந்து மீண்ட பெண் பயணி கூச்சலிட, மற்ற பயணியர் ஓடிவந்து, அபாய சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்த முயன்றும், சங்கிலி செயல்படாததால், ரயில் நிற்கவில்லை.பெட்டியில் இருக்கும் ரயில்வே ஊழியரிடம் உதவிகோர தேடியும், அவர் அங்கு இல்லை.ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவிக்க அவர், ரயில்வே உதவி எண், 182க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க சொல்லிவிட்டார்.



அதன்பின் ரயில், மத்திய பிரதேசம், இட்டார்சி நிலையம் சென்றபோது, அங்கு ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் கொடுக்கப்பட்டது.பயணத்தில், உரிய பாதுகாப்பு வழங்காத, தெற்கு ரயில்வே மற்றும் மும்பை மத்திய ரயில்வே மண்டலங்கள், இழப்பீடு வழங்க கோரி, சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், பயணி வழக்கு தொடர்ந்தார்.



வழக்கு விசாரணையில், பயணியின் நகை திருட்டு சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்தது. அங்குள்ள கீழமை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தெற்கு ரயில்வே, மத்திய ரயில்வே மண்டலங்கள் தெரிவித்தன. வழக்கு மூன்றாண்டுகளாக நடந்து வந்தது.



வழக்கில், நீதிபதி மோனி, நீதித்துறை உறுப்பினர் ஜெயந்தி பிறப்பித்த உத்தரவு:ரயில்வே மண்டலங்களின் சேவையில் குறைபாடு உள்ளன. பெண் பயணிக்கு நகைக்காக, 1.36 லட்சம் ரூபாய், இழப்பீடு, 30 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் என, 1.71 லட்சம் ரூபாய், தெற்கு மற்றும் மத்திய ரயில்வேமண்டலங்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் உத்தரவிட்டனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X