திட்டமிடப்படாத மழை நீர் வடிகால் சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
00:31

அம்பத்துார் : திட்டமிடப்படாத மழை நீர் வடிகாலில், கழிவு நீர் தேங்கி, கொசு உற்பத்தி உள்ளிட்ட, சுகாதார சீர்கேடு நீடிப்பதால், பலத்த மழையின்போது, வெள்ள பாதிப்பு ஏற்படும் என, பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.சென்னை, அம்பத்துார் மண்டலம், 88 மற்றும் 90வது வார்டுகளில் உள்ள, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில், 2015ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தவிர்க்க, மாநகராட்சி மூலம், மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன.ஆனால், மழை வெள்ள நீரோட்டத்தை திட்டமிடாமல், கண்துடைப்பாக அவை அமைக்கப்பட்டுள்ளன. இதனால், கால்வாய்க்குள் பாயும் மழை நீர், வடிந்து செல்ல வழியில்லை.பாடிக்குப்பம் மழை நீர் வடிகால்வாயும், உயரம் குறைந்துள்ளது.இதனால், அம்பத்துார் மண்டலத்தின் முகப்பேர் சுற்றுவட்டாரங்களில் இருந்து வெளியேற்றப்படும் மொத்த கழிவு நீரும், அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், 'பி' செக்டர் மற்றும் பார்க் ரோடு ஆகியவற்றில் உள்ள, மழை நீர் வடிகால்வாயில் தேங்கி விடுகிறது. மழைக்காலத்தில், அவை வெளியேற வழியில்லை.இதனால், கொசு உற்பத்தி, துர்நாற்றம் அதிகரித்து, பகுதி முழுக்க சுகாதார சீர்கேடு அதிகரிக்கிறது. மேற்கண்ட பகுதிகளில் இருந்து, மழை நீர் வெளியேறி ஓட்டேரி நல்லா கால்வாய்க்குள் செல்ல வேண்டும்.ஆனால், பார்க் ரோடு மற்றும் 200 அடி சாலைக்கும் இடையே உள்ள, சில தனியார் ஆக்கிரமிப்புகளால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை.அதனால், பலத்த மழை நீடித்தால், 2015ம் ஆண்டு ஏற்பட்டதை போல், வெள்ள பாதிப்பு ஏற்படும் என, அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.நடவடிக்கை அவசியம்எங்கள் பகுதி மழைநீர் வடிகால்வாய் பிரச்னை குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்து விட்டோம். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கொசு மருந்து தெளிப்பதால், அப்போது மட்டுமே பிரச்னை தீரும். மழைநீர் வடிகால், இப்போது கழிவு நீர் கால்வாயாக மாறிவிட்டது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து, மழைநீர் வடிகால்வாய் கட்டியும் பயன் இல்லை. மாநகராட்சி பொறியாளர்கள், உரிய ஆய்வு செய்து, மழை மற்றும் கழிவு நீர் தேங்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகி, அண்ணாநகர் மேற்கு விரிவாக்க 'பி' செக்டர் குடியிருப்போர் நலச்சங்கம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sukkan galpa - BSB,புருனே
26-அக்-202010:37:59 IST Report Abuse
sukkan galpa Even the chief engineer of Chennai corporation will not know how to engineer, plan & built either drainage structure or not even pedestrian platform. Right from the top until bottom, they all need only bribes to perform their duty with half cooked knowledge.
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
26-அக்-202001:19:26 IST Report Abuse
Raj பங்கு போட்டு தின்பதற்காக அட்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X