பாதிக்கப்பட்டோருக்கு உதவும் அதிகாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
04:52

சென்னை : சாலை விபத்தால் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தோரின் குடும்பத்தாருக்கு, இழப்பீட்டு தொகை கிடைக்க, உதவி செய்யும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



சென்னையில், சாலை விபத்துகளில் சிக்கிய உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தோரின் குடும்பத்தாருக்கு, இழப்பீட்டு தொகை விரைந்து கிடைக்கவும், அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கவும் உதவி செய்ய, அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என, போலீஸ் கமிஷனர், மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.அதன்படி, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து உதவி செய்ய, போக்குவரத்து புலனாய்வு பிரிவில், அதிகாரிகளை நியமித்துள்ளார். அவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரிடையாக சந்தித்து, ஆலோசனை வழங்கி வருகின்றனர்.



அத்துடன், விபத்து தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டிய படிவங்களை பூர்த்தி செய்து தருவது, அதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து கொடுப்பது, காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து ஆவணங்களை சேகரித்து கொடுப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்து தருகின்றனர்.அதேபோல, விபத்துகளை ஏற்படுத்திய, வாகன ஓட்டிகளை நேரில் வரவழைத்து, போக்குவரத்து விதிகள் குறித்து விளக்குகின்றனர். குடும்பத்தில் வருமானம் ஈட்டி வந்தவர்களின் உயிரிழப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், காயமடைந்தவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானம் இன்றி தவிப்பதையும், அவர்கள் உடல் உபாதைகளால் அனுபவித்து வரும் இன்னல்கள் குறித்தும் எடுத்துரைக்கின்றனர்.



போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:இழப்பீட்டு தொகை பெற்று தருவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், இடைத்தரகர்கள் பண வசூலில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதற்கு முடிவு காணும் வகையில், விபத்துகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன், நேரடி தொடர்பில் இருந்து, அவர்களுக்கு மனிதாபிமானத்துடன் தேவையான உதவிகளை செய்ய, போலீசாரை நியமித்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saseendran chennai - chennai,இந்தியா
26-அக்-202016:04:30 IST Report Abuse
saseendran chennai தற்பொழுது டிராபிக் இன்வெஸ்டிகஷன் போலீஸ் செய்யும் அராஜக செயலுக்கு கமிஷனர் அதிகார ஒப்புதல் கொடுத்துள்ளார். தற்பொழுது காயம் பட்டவர்களை கட்டாயப்படுத்தி குறிப்பிட்ட வக்கீல்களிடம் கேஸ் கொடுக்க வைத்து காயம் பட்டிருந்தால் ரூபாய் 25000/- பெற்றுக்கொள்கின்றனர்/ மரணமடைந்த வழக்கிற்கு கேட்கவாவேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X