விழுப்புரம் : விழுப்புரம்,அலமேலுபுரம் பகுதியில் அமைந்துள்ள இந்தியன்வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி இலவச பயிற்சிதுவக்க விழா நடைபெற்றது.இந்த பயிற்சி, கோலியனுார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் சங்க கட்டடத்தில் 30 நாட்கள் நடைபெறவுள்ளது.
துவக்க விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் முகேஷ் தமிழரசன் ஆகியோர் பங்கேற்றுபயிற்சியை துவக்கி வைத்தனர்.இதில், பயிற்சியாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பயிற்சி மைய இயக்குனர் அனிதா நன்றி கூறினார்.