செஞ்சி : வல்லம், நாட்டார்மங்கலத்தில் மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காங்., கட்சியினர் கையெழுந்து இயக்கம் நடத்தினர்.
கிழக்கு வட்டார தலைவர் சுப்ரமணி தலைமைதாங்கினார். மாவட்ட பார்வையாளர் திலகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், நகர தலைவர்கள் விக்கிரவாண்டிகுமார், திண்டிவனம் விநாயகம் முன்னிலைவகித்தனர். வல்லம் வடக்கு வட்டார தலைவர் இளவழகன் வரவேற்றார்.விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், அரங்க சிவக்குமார், அன்புச்செழியன், சேதுராமன், கோவிந்தராஜ், தீனதயாளன், ஜெயபால், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.