விழுப்புரம், : விழுப்புரத்தில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் மருதப்பன் தலைமையிலான போலீசார் நேற்று தெற்கு ரயில்வே காலனிபகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது, அங்கு பாழடைந்த வீட்டில், கீழ்பெரும்பாக்கம் சவுந்திரராஜன், 32; சுக்கு சுரேஷ்,36; முத்து, 26; கடலுார் மாவட்டம், வி.ஆண்டிகுப்பம், ராகுல், 29; விழுப்புரம், வண்டிமேடு ராகுல், 21; ராம்பாக்கம் ஜெயராஜ், 29; ஆகியோர் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டி கொண்டிருந்தனர்.உடன் போலீசார் அவர்கள் 6 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.