வியாபார நிறுவனங்களுக்கு நகராட்சி எச்சரிக்கை! பண்டிகை காலத்தில் நோய் தடுப்பு தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
05:45

கடலுார் : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பண்டிகை காலத்தை முன்னிட்டு வியாபார நிறுவனங்களுக்கு கடலுார் நகராட்சிநிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.



தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் காணப்படும் என்பதால் நோய் தொற்று மீண்டும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.



இதனால், வியாபார நிறுவனங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.கடலுார் நகராட்சிக்குட்பட்ட லாரன்ஸ் ரோடு, மஞ்சக்குப்பம், முதுநகர், புதுநகர், செம்மண்டலம் உட்பட பல பகுதிகளில் உள்ள மார்க்கெட்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வியாபார நிறுவனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.அதன்படி, கடலுார் பகுதிகளில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.



தற்போது, பண்டிகை காலம் என்பதால் கொரோனா பரவல் அதிகமாகும் அபாயம் உள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.முகக் கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளி நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். 'ஏசி' பயன்படுத்துவதை தவிரக்க வியாபார நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.



கட்டுப்பாடுகளை மீறும் வியாபார நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடலுார் நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.நோய் தடுப்பு நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X