கடலுார் : புதுச்சேரியில் இருந்து கடலுாருக்கு சாராயம் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், முதுநகர் போலீஸ் நிலையம் அருகில் சப் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையி்ல் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கடலுாரில் இருந்து முதுநகர் நோக்கி சாக்கு மூட்டைகளுடன் மொபட்டில் வந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.இதில், கடலுார், முதுநகரைச் சேர்ந்த ஸ்ரீகுமரன், 31; என்பதும், புதுச்சேரியில் இருந்து கடலுாருக்கு 120 லி்ட்டர் சாராயம் விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன் போலீசார், வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, சாராயத்தையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.