ஓசூர் மாநகர தி.மு.க., செயற்குழு கூட்டம் | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
ஓசூர் மாநகர தி.மு.க., செயற்குழு கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2020
08:58

ஓசூர்: ஓசூர் மாநகர, தி.மு.க., செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. ஓசூர் தொகுதி பொறுப்பாளர் சத்யா எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் பேசினர். கூட்டத்தில், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக ஸ்டாலினை அமர வைப்பது. மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து விட்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பிணையில் வந்தவர்களை வைத்து, மக்கள் திட்டங்களை செயல்படுத்தி வரும் அதிகாரிகளை கண்டிப்பது. ஓசூர் மாநகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சாலைகள் பராமரிக்கப்படாமல், தோண்டிய பள்ளங்கள் மூடப்பட்டாமல் உள்ளது. பாகலூர் மெயின் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட, தி.மு.க., அனுமதியுடன், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது, என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மேற்கு மாவட்ட, தி.மு.க., அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X