பா.ம.க., நிர்வாகி கைதால் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
08:59

ஓசூர்: சூளகிரியில், பா.ம.க., நிர்வாகியை கைது செய்ததை கண்டித்து, போலீஸ் ஸ்டேஷனை பா.ம.க.,வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


சூளகிரி அடுத்த பீரேபாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன், 43; பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர்; இவர், தன், 'பேஸ்புக்' பக்கத்தில், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்தும் வகையில், பதிவு செய்திருப்பதாக, துப்புகானப்பள்ளியை சேர்ந்த வி.சி., கட்சியின் தொழிலாளர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் வேங்கைவளவன், 41, சூளகிரி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, தியாகராஜனை, சூளகிரி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதையறிந்த, பா.ம.க.,வினர், மாநில மகளிர் இளம்பெண்கள் சங்க செயலாளர் தமிழ்செல்வி வரதராஜன், மாநில துணை பொதுச்செயலாளர் வக்கீல் இளங்கோ தலைமையில், சூளகிரி ஸ்டேஷன் முன் திரண்டனர். அவரை ஜாமினில் விடுவிக்க போலீசாரை கேட்டபோது, போலீசார் மறுத்துள்ளனர். இதையடுத்து, பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் மீது, பா.ம.க., சார்பில், சூளகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதற்கு, உடனடியாக எப்.ஐ.ஆர்., போட வேண்டும் என, பா.ம.க.,வினர் கேட்டனர். ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், நேற்று காலை, பா.ம.க.,வினர் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பா.ம.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் மஞ்சு மற்றும் ஆட்டோ டிரைவர் முனியப்பன் ஆகியோர், உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இச்சம்பவத்தால், சூளகிரியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X