மேட்டூரில் 210 மெகாவாட் அனல்மின் உற்பத்தி: தினமும் 19 ஆயிரத்து 500 டன் நிலக்கரி மிச்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
09:51

மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையங்களில், 210 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்வதால், தினமும், 19 ஆயிரத்து, 500 டன் நிலக்கரி மிச்சமாகிறது.


மேட்டூர், பழைய அனல்மின் நிலையத்தில், ஒரு அலகில், 210 மெகாவாட் வீதம், நான்கு அலகுகளில், 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. முழுமையாக, 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய, தினமும், 14 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்படும். அதேபோல், மேட்டூர், புது அனல்மின் நிலையத்தில், 600 மெகாவாட் உற்பத்தி செய்ய, தினமும், 9,000 டன் நிலக்கரி எரிக்கப்படும். மொத்தமாக, மேட்டூர் அனல்மின் நிலையங்களில், 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய, தினமும், 23 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. தமிழகத்தில், சில மாதமாக காற்றாலை, நீர்மின் நிலையங்கள் மூலம், அதிகளவில் மின்சாரம் கிடைக்கிறது. மேலும், தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது. இதனால், தினசரி மின்தேவை அதிகபட்சம், 14 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இதர காற்றாலை, நீர்மின் உற்பத்தியை விட, அனல்மின் உற்பத்திக்கு செலவு அதிகம். ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய, சராசரியாக, 5.50 ரூபாய் வரை செலவாகிறது. மேலும், மின்வாரியம் நீண்டகால, இடைக்கால, குறுகியகால ஒப்பந்த அடிப்படையில், தனியாரிடம் சராசரியாக, 4,000 மெகாவாட் வரை, கொள்முதல் செய்கிறது. ஒப்பந்தப்படி மின்சாரத்தை வாங்க மறுத்தாலும், அதற்கான தொகையை, வாரியம் செலுத்தியாக வேண்டும். ஒப்பந்தப்படி மின்சாரம் வாங்கும் நிலையில், காற்றாலை, நீர்மின் நிலையங்கள் மூலம், மின்சாரம் கூடுதலாக கிடைக்கும் காலகட்டத்தில், வாரியம், அனல்மின் நிலையங்களில், மின்உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி விடுகிறது.


மொத்தம், 4,320 மெகாவாட் உற்பத்தி திறனுடைய, தமிழக அனல்மின் நிலையங்களில், சில நாளாக, 700 முதல், 800 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும், 1,440 மெகாவாட் திறனுடைய, மேட்டூர் அனல்மின் நிலையங்களில், 50 நாளுக்கு மேலாக, 210 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆக., 7ல் உற்பத்தி நிறுத்தப்பட்ட, மேட்டூர் புது அனல்மின் நிலையத்தில், இன்னும் உற்பத்தி தொடங்கப்படவில்லை. இதனால், 80 நாளில் மட்டும், 7.20 லட்சம் டன் நிலக்கரி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. பழைய அனல்மின் நிலையத்தில், 50 நாளாக, 210 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்வதால், இதுவரை, 5.25 லட்சம் டன் நிலக்கரி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. தினமும், 210 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்வதால், மேட்டூர் அனல்மின் நிலையங்களில், தினமும் சராசரியாக, 19 ஆயிரத்து, 500 டன் நிலக்கரி மிச்சப்படுத்தப்படுகிறது. அதற்கேற்ப, மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு வரும் நிலக்கரி அளவும் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்வதால், 50 நாளாக நிலக்கரி புகையில், மேட்டூரில் ஏற்படும் சுற்றுசூழல் மாசு அளவும் கணிசமாக குறைந்துள்ளது. காற்றாலை, நீர் மின் உற்பத்தி கைகொடுப்பதால், மேட்டூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்க, மேலும் பல நாளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X