நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் மவுனம்: ஆத்தூர் பகுதி சுவேத நதியில் தொடரும் மணல் கடத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
10:41

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கெங்கவல்லி வழியாக செல்லும் சுவேத நதியில் மணல் கடத்தல் தொடர்கிறது.


நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உற்பத்தியாகும் சுவேத நதி, சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர் வழியாக, பாய்ந்து செல்கிறது. இதில், கெங்கவல்லி, வலசக்கல்பட்டி பாலம், தம்மம்பட்டி, வீரகனூர், திட்டச்சேரி, கவர்பனை உள்ளிட்ட பகுதிகளில், மணல் கடத்தப்படுகிறது. டிராக்டர் பிடிபட்டால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பதால், மாட்டு வண்டி மூலம், பிளாஸ்டிக் சாக்கு பைகளில் மணலை அள்ளி, எண் இல்லாத இருசக்கர வாகனம், டிராக்டர், மினி சரக்கு வேன்களில் கடத்துகின்றனர். இவற்றை, குறிப்பிட்ட இடங்களில் குவித்து விற்கின்றனர். இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த, 2018ல், கெங்கவல்லி சுவேத நதி ஆற்று படுகை விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2019 மார்ச், 21ல், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள், 'மணல் கடத்தலை தடுக்க, கண்காணிப்பு குழு அமைத்து, கும்பலை கைது செய்ய வேண்டும். சுவேத நதியை பாதுகாக்க வேண்டும்' என, சேலம் கலெக்டர், ஆத்தூர் ஆர்.டி.ஓ., கெங்கவல்லி தாசில்தார், பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டனர். அதை மீறி, இரவில் மணல் கடத்தல் தொடர்கிறது.


இதுகுறித்து, ராஜேந்திரன் கூறியதாவது: உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, 2018 ஜன., 2 முதல், 2019 ஜன., 16 வரை, 38 வாகனங்கள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்ததாக, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். சுவேத நதியில் மணல் கடத்தலே இருக்கக்கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து, அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், மண் அள்ளும் இயந்திரத்தை பயன்படுத்தி, இரவில் மணலை கடத்துவது தொடர்கிறது. இதனால் ஆறுகளின் தடம் பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து கால்வாயாக இருக்கும் சிற்றாறுகள் மாயமானதால், கனமழை பெய்தாலும், சொட்டு தண்ணீர் கூட கண்மாய்களுக்கு செல்வதில்லை. கடத்தல் மணல், ஒரு டிப்பர், 10 ஆயிரம் ரூபாய், இருசக்கர வாகனத்தில் எடுத்து வரும் மணல் மூட்டை, 100 ரூபாய்க்கு விற்கின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு, மணல் கடத்துவோர் பட்டியலை, கலெக்டர், ஆர்.டி.ஓ., - தாசில்தாரிடம் வழங்கியும் பலனில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


ஆத்தூர் ஆர்.டி.ஓ., துரை கூறுகையில், ''வசிஷ்ட நதி, சுவேத நதியில் மணல் கடத்தலை தடுக்க, கண்காணிப்பு குழு அமைத்து, 'ரோந்து' பணி மேற்கொள்ளப்படுகிறது. மணல் கடத்துபவர் மீது, வழக்குப்பதிவு, அபராதம் விதிக்கப்படுகிறது. சுவேத நதியில் மணல் கடத்தப்படும் இடங்கள் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


- நமது நிருபர் -


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X