கூட்டமாக வாழும் பழந்தின்னி வவ்வால்; பட்டாசு வெடிக்காத அதிசய கிராமம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
10:42

ஆத்தூர்: ஊனத்தூர், கருத்தராஜாபாளையம், கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளில், மரத்தில் பழந்தின்னி வவ்வால்கள் கூட்டமாக வாழ்கின்றன. இவைகளை காப்பாற்ற, கிராம மக்கள் அதிக சத்தம் வரும் பட்டாசு வெடிக்காமல், தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.


சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள, ஊனத்தூர் கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள மணியம்மன் கோவில் வளாகத்தில், மூங்கில், ஆலமரம், மருதமரங்கள் உள்ளன. அதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பகுதியில் வசித்து வரும் பழந்தின்னி வவ்வால்கள், மணியம்மன் கோவில், சுப்ரமணியர் கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. இரவு நேரங்களில், கல்வராயன் மலை பகுதிக்கு, இரை தேட சென்றுவிட்டு, அதிகாலையில் வந்து தங்கும் பழந்தின்னி வவ்வால்களை, யாரும் துன்புறுத்துவது இல்லை. துவக்கத்தில், வவ்வால்களை வேட்டையாட வந்த கும்பலை, இப்பகுதியினர் விரட்டிவிட்டனர். கிராம மக்கள் வவ்வாலுக்கு தொந்தரவு கொடுப்பதில்லை. கோவிலில் விழா நடத்தும்போது கூட, அதிக சத்தம் வரும் அதிர்வேட்டுகளை தவிர்த்து வருகின்றனர். பல ஆண்டுகளாக, தீபாவளி அன்று கூட, பட்டாசு வெடிக்காமல், கிராமத்தினர் விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.


அதேபோல், ஆத்தூர் அருகே, மல்லியக்கரை ஊராட்சி, கருத்தராஜாபாளையம் கருப்பண்ணார் கோவில், கருமந்துறை வனச்சரக அலுவலகம், வாழப்பாடி ஆகிய இடங்களில் உள்ள ஆலமரங்களில், வவ்வால்கள் அதிகம் காணப்படுகின்றன. இப்பகுதிகளிலும், பட்டாசு வெடிப்பதில்லை. நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு, ஒலி எழுப்பும் தன்மை கொண்ட வவ்வால்களை, அழிவில் இருந்து காக்க வேண்டியது கடமை என, கிராம மக்கள் பெருமையாக கூறுகின்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN K - East Tambaram, Chennai,இந்தியா
27-அக்-202007:10:37 IST Report Abuse
RAMAKRISHNAN K அது "வவ்வால்" அல்ல "வௌவ்வால்".
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X