மங்கலம்பேட்டை காவல் நிலையத்தை பா.ம.க., முற்றுகையிட்டதால் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2020
13:54

விருத்தாசலம் : உருட்டு கட்டைகளுடன் வலம் வந்து கொலைமிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மங்கலம்பேட்டை காவல் நிலையத்தை பா.ம.க.,வினர் முற்றுகையிட்டனர்.




கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த மாத்துாரை சேர்ந்தவர் அசோக், அதே பகுதியைச் சேர்ந்தவர் அரசன். இருவரது வயலும் அருகருகே உள்ளன.கடந்த 23ம் தேதி, வயலில் தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதுசம்பந்தமாக அரசன் கொடுத்த புகாரின் பேரில், அசோக் உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில், அரசன் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர், உருட்டு கட்டைகளுடன் தெருக்களில் வலம் வந்து, பொது மக்களை ஆபாசமாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.


கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய கோரி, பா.ம.க., மாநில துணைப் பொதுச் செயலர் அசோக்குமார் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், நேற்று, காலை 11:00 மணியளவில், மங்கலம்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர்.டி.எஸ்.பி., ராமச்சந்திரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்து, 11:40 மணிக்கு கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X