ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், கொரோனா குறித்த அச்சம் இல்லாததாலும் சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் 75 சதவீதம் பேர் உலா வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்., முதல் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்தது. சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் தான் பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. இதனால் மக்களிடையே கொரோனா குறித்த அச்சம் இல்லை. கடைகள் உட்பட பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பது இல்லை.மேலும் 75 சதவீத மக்கள் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர். பல கடைகளில் சானிடைசர் பயன்படுத்துவதும் இல்லை. மக்கள் கைகளை சுத்தம் செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.