தொடர் திருட்டு நபரை பிடித்த இளைஞர்கள் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
தொடர் திருட்டு நபரை பிடித்த இளைஞர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2020
00:24

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் குடியிருப்பு பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.



ராஜபாளையம் துரைசாமிபுரம் பகுதிகளில் அலைபேசி, டூ வீலர் , பெட்ரோல் திருட்டு,வாகனங்கள் எரிப்பு போன்ற தொடர் குற்ற சம்பவங்கள் நடந்து வந்தது.நெசவாளர் பகுதியின் பல்வேறு இடங்களில் சமுதாயம் சார்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. 2 மாதத்திற்கு முன்அடையாளம் தெரியாத நபர் பெட்ரோல் திருடுவது பதிவாகி இருந்தது.




இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் 20 பேர் நள்ளிரவு ரோந்தில் ஈடுபட்டனர். நேற்றுஅதிகாலை 4 :00 மணிக்கு பெட்ரோல் கேனுடன் வந்தவரை நிறுத்தி விசாரித்த போது தொடர் திருட்டில் ஈடுபட்டவர் என்பது தெரிந்தது.அவரை சமுதாய கூடத்தில் கட்டி வைத்தனர். தர்ம அடி கொடுத்து விசாரித்ததில் செங்குட்டுவன் தெருவை சேர்ந்த இசக்கிஎன்பதும், தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.இதுன் பின் அவரை தெற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X