போடி : டொம்புச்சேரி -- நாகலாபுரம் மெயின் ரோட்டில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.
போடி அருகே உப்புக்கோட்டையிலிருந்து டொம்புச்சேரி, நாகலாபுரம் வழியாக தேவாரம் செல்வதற்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரோடு அமைக்கப்பட்டது. பஸ், கார், வேன், டூவீலர் உட்பட 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன.
உப்புக்கோட்டை, டொம்புச்சேரி விவசாயிகள் விளைபொருட்களை தேவாரம் கொண்டு செல்லவும், நாகலபுரம், பெருமாள்கவுண்டன்பட்டி விவசாயிகள் உப்புக்கோட்டை வழியாக தேனி செல்ல இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். இதனிடையே நாகலாபுரத்தில் இருந்து டொம்புச்சேரி செல்லும் ரோட்டில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரவில் டூவீலரில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர். இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.