கொடைக்கானல் : 'எட்டு போட்டு நடந்தால் முதுமை உங்களை எட்டாது' என்பதை வலியுறுத்தி, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இங்கு பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்வதுண்டு. நடப்பாண்டில் பிரையன்ட் பூங்காவில் மாற்றங்களுக்கு பஞ்சமில்லை என்பது போல் களப்பணி உள்ளது. அயிரசின், டொராண்டோ உள்ளிட்ட தாவரங்களால் 300 மீ., எட்டு வடிவ நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.எட்டு வடிவ நடைபாதையில் நடப்பதால் உள்ளங்காலில் உள்ள வர்ம ஆற்றல் புள்ளிகள் துாண்டப்படும். இதனால் நோய்களை கட்டுக்குள் வைக்க முடியும். உடல் ஆரோக்கியமாகும். பூங்காவின் முயற்சிக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்புள்ளது.