ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் முருங்கை, மாங்காய், வெண்டை உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. நேற்று முன்தினம் கரும்பு முருங்கை கிலோ ரூ.50 க்கு விற்றது. நேற்று ரூ.3 அதிகரித்து ரூ.53 க்கு விற்றது. இதேபோல் ரூ.47 க்கு விற்ற செடி முருங்கை ரூ.50 க்கும், ரூ.35 க்கு விற்ற மரம் முருங்கை ரூ.38 க்கு விற்றது.
கிலோ ரூ.10 க்கு விற்ற வெண்டை ரூ.12 க்கும், ரூ.42 க்கு விற்ற நீலா மாங்காய் ரூ.42க்கும், ரூ.50க்கு விற்ற கல்லாமை ரூ.52க்கும், ரூ.57 க்கு விற்ற செந்துாரம் ரூ.60 க்கும் விற்றது. இதேபோல் ரூ.4 க்கு விற்ற சுரைக்காய் ரூ.5 க்கும் விற்றது. பீட்ரூட் ரூ.25 க்கும், டிஸ்கோ கத்தரி ரூ.13.35 க்கும் விற்றது.