போன வருஷம் ரெண்டு... இந்த வருஷம் எட்டு! நவம்பரில் ஆவின் நெய் ஸ்வீட்ஸ் சுவைக்கலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

27 அக்
2020
02:30
பதிவு செய்த நாள்
அக் 27,2020 01:18

கோவை:ஆவின் பால் நிறுவனம், இந்த தீபாவளிக்கு எட்டு வகையான இனிப்பு வகைகளை, அசல் நெய்யில் தயாரித்து வழங்குகிறது.ஆவின் என்றால் முன்பெல்லாம் பால், நெய் மற்றும் தயிர் மட்டும்தான் நினைவுக்கு வரும். ஆனால் இன்றைக்கு பால்கோவா, ஐஸ்கிரீம் என, துவங்கி, விதவிதமான ஸ்வீட்ஸ் வகைகளை தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு இனிப்பு வகைகளை, சுத்தமான ஆவின் நெய்யில் தயாரித்து வழங்குகிறது.நெய் மைசூர்பா, காஜு கட்லி, சாக்லெட் காஜூ, முந்திரி அல்வா, பாதாம் அல்வா, நட்ஸ் பிஸ்தா பர்பி, நட்ஸ் சாக்லேட் பர்பி, பாம்பே முந்திரி அல்வா, பாம்பே பாதாம் அல்வா மற்றும் பால் பேடா ஆகிய இனிப்பு வகைகளை, தரமாக தயாரித்து நியாயமான விலையில் வழங்கவுள்ளது.நவ.,1ம் தேதி முதல்உக்கடம், காந்திபுரம், வ.உ.சி., பார்க், மற்றும் ஆர்.எஸ்.புரம் ஆவின் பாலகங்களில், 250 கிராம் மற்றும் 500 கிராம் பாக்கெட்களில் கிடைக்கும்.


கோவை மாவட்டத்தில் உள்ள ஆவின் மொத்த விற்பனையாளர்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.இனிப்பு தேவைப்படும் வாடிக்கையாளர்கள், 98946 77945, 94890 43715 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.கடந்த தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்டாக, இரண்டு ஸ்வீட் ரகங்கள் தயாரித்து வழங்கினோம். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த ஆண்டு, எட்டு வகை இனிப்பு தயாரித்து வழங்க இருக்கிறோம். நவ.,1ம் தேதி முதல் இந்த ஸ்வீட்கள், ஆவின் பாலகங்களில் கிடைக்கும்.-ரவிக்குமார், ஆவின் பொதுமேலாளர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JVM -  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-202022:58:01 IST Report Abuse
JVM I had a bad experience last year when i buy special milk kova at Kovai which had fungus in it.Then I stopped buying sweets from Aavin, only milk
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X